கோலாலம்பூர், ஜன 7 – வரும் ஜனவரி 10 ஆம் தேதி ஆப்பிள் பொருட்களுக்கு சலுகை விலை அளிப்பதாக இணையத்தளம் மூலம் மலேசியன் ஆப்பிள் ஸ்டோர் (Malaysian online Apple store) விளம்பரப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் தனது தயாரிப்புகளுக்கு சிறப்பு விழாக் காலங்களைத் தவிர, மற்ற நாட்களில் அடிக்கடி சலுகை விலை அளிக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே வாடிக்கையாளர்கள் விற்பனை நாளுக்குத் தங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
அந்த விளம்பரத்தின் படி, ஒரே ஒருநாள் மட்டுமே இந்த விற்பனை நடைபெறும். அதேவேளை விற்பனை பொருட்கள் உள்ளவரை வரை மட்டுமே. எனவே ஜனவரி 10 ஆம் தேதிக்கு முன்னரே ஆப்பிளில் இணையத்தள விற்பனையை வாடிக்கையாளர்கள் கவனித்து வருவது நல்லது.
ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் விற்பனை பொதுவாக மலேசியாவில் சீன புத்தாண்டு சமயத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை ஜனவரி 10 ஆம் தேதி அறிவித்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.
ஆப்பிளின் மேக்புக் செயலி மற்றும் ஐமேக்ஸ் மற்றும் ஐபேட், ஐபோன், ஐபாட்ஸ் ஆகியவற்றுக்கு சலுகை விலை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்த மேல் விபரங்களை http://store.apple.com/my என்ற இணையத்தள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.