Home தொழில் நுட்பம் செல்லியல் 2.0 அறிமுகம் கண்டது!புதிய பயனீட்டு அனுபவங்களோடு நவீன தொழில் நுட்ப அம்சங்கள்!

செல்லியல் 2.0 அறிமுகம் கண்டது!புதிய பயனீட்டு அனுபவங்களோடு நவீன தொழில் நுட்ப அம்சங்கள்!

798
0
SHARE
Ad

IMG_1437கோலாலம்பூர், ஜன 10 – மலேசியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையத்தோடு, கையடக்கக் கருவிகளிலும் தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் ஒரே ஊடகமான செல்லியல் தன் தொழில் நுட்ப அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

2013ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் அறிமுகம் கண்ட செல்லியல், தமிழை பல படிநிலைகளில் தொழில்நுட்பத்தோடு இணைத்து இணையம் முதல் திறன்பேசிகள் வரை புதிய ஊடகங்களின் வழி ஆயிரக் கணக்கான பயனர்களை அடைந்துள்ளது.

பல புதிய மேம்பாடுகளைக் கொண்டுவரும் செல்லியலின் அடுத்த கட்ட வளர்ச்சியான “செல்லியல் 2.0” உருவாக்கத்தின் அறிமுக விழா இன்று  வெள்ளிக்கிழமை 10 ஜனவரி 2014, மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கோலாலம்பூரின் பிரபல தங்கும் விடுதியொன்றில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

திரளான ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.IMG_1431

இதுவரை பெற்ற அனுபவங்களையும் பயனரிடம் இருந்து பெற்ற கருத்துக்களையும் ஒருங்கிணைத்து, செல்லியல் ஆசிரியர் குழுவினரும், தொழில் நுட்பக் குழுவினரும், இணைந்து செல்லியலின் அடுத்த கட்ட மேம்பாட்டுக்கு அடிப்படை அமைத்திருக்கின்றனர். இந்த மேம்பாட்டில் பல அம்சங்களைச் சேர்த்திருப்பதுடன்  புதிய பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும்  உருமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த அறிமுக நிகழ்வில் செல்லியலின் இணை நிறுவனரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் இந்தப் புதிய உருவாக்கத்தைப் பற்றி செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கங்களை வழங்கினார்.

செல்லியலின் புதிய, நவீன தொழில் நுட்ப அம்சங்களில் சில பின்வருமாறு:-

Ø  புதிய முகப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட செய்திப் பிரிவுகள்

Ø  சுலபமாக செய்திப் பிரிவுகளை தேர்வு செய்து படிக்கும் வகையில் பயனர்களுக்கு உதவும் அமைப்பு

Ø  தொழில் நுட்ப மாற்றங்களையும் செய்திகளையும் உடனுக்குடன் வழங்கும் வகையில் ‘தொழில் நுட்பம்’ என்ற புதிய செய்திப் பிரிவு

Ø  வாசகர்களுக்கு நேரடியாக செல்பேசி மூலம் குறுந்தகவலாக செய்திகளை உடனுக்குடன் வழங்கும் சேவை

Ø  நடப்பு செய்திகளைப் படிக்கும் சமயத்தில், அந்த செய்திகளுடன் ஊடே அந்த செய்திகளின் முந்தைய தகவல்களையும், பின்னனியையும் இணைப்புச் செய்திகளாக இணைத்திருக்கும் அம்சம்.

Ø  எழுத்து வடிவ செய்திகளுடன் காணொளி படங்களாக (வீடியோ) செய்திகளை இணைத்திருக்கும் வசதி.

Ø  தமிழ் நன்கு பேசக் கூடிய ஆனால் நேரடியாகத் தமிழ் மொழியை படிக்க இயலாதவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் எழுத்து வடிவத்தை உரோமன் வடிவத்தில் ஆங்கில மொழியில் படிக்கும் வண்ணம் ஒரே விசை அழுத்தலில் மாற்றும் தொழில் நுட்பம்.

Ø  சுவாரசியமான செய்திகளை விரும்பியவர்களுடன் இணையம் மற்றும் நட்பு ஊடகங்களின் வழியாக சுலபமாகப் பகிர்ந்து கொள்ளும் அனுபவம்.

Ø  ஐ-பேட், மற்றும் தட்டைக் கணினிகளுக்கென தனிச் சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு.

Ø  தனித் தனியாக உருவாக்கப்பட்ட பிரிவுகளுடன் தமிழ் – ஆங்கிலம் இரு மொழிகளிலும் வழங்கப்படும் செய்திகள்

Ø  இவ்வளவு தொழில் நுட்ப வசதிகள், புத்தம் புது நவீன அம்சங்கள் இருந்தாலும் இன்னும் இலவசமாகவே செல்லியல் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிட்டத்தக்கது.