Home அவசியம் படிக்க வேண்டியவை ஐ கார்டுக்கு 110 ரிங்கிட் அதிகமா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் – சாஹிட்

ஐ கார்டுக்கு 110 ரிங்கிட் அதிகமா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் – சாஹிட்

1143
0
SHARE
Ad

icardஅலோர் காஜா, ஜன 13 – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்  ஐ கார்டை 110 ரிங்கிட் கொடுத்து வாங்க, முதலாளிகள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,அவர்கள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த தேவையில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மலேசியாவில் ஐ கார்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை குறைவு தான். இந்த விலையை முதலாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உங்களுக்கு வேலை செய்யும் வெளிநாட்டினரை வீட்டிற்கு அனுப்புங்கள்.சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் முதலாளிகள் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த ஒவ்வொருவருக்கும் தலா 16,400 ரிங்கிட்டிற்கு ( 5,000 யுஎஸ் டாலர்) குறையாமல் வரி செலுத்த வேண்டும். ஆனால் மலேசியாவில் ஒரு தொழிலாளிக்கு 1,850 ரிங்கிட் வரியும், மருத்துவ பரிசோதனைகள், ஐ கார்டு ஆகியவற்றை சேர்த்து மொத்தம் 3,000 ரிங்கிட் மட்டுமே முதலாளிகள் செலுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஐ கார்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 110 ரிங்கிட் விலை முதலாளிகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்று அரசாங்கத்திற்கு எதிராக மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு குரல் கொடுத்திருப்பதாக கூறப்படுவதற்கு சாஹிட் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

6p திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள 2.3 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலார்கள், ஐ கார்டு வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த ஐ கார்டை இவ்வருட இறுதிக்குள் பெறாதவர்கள், இந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கருதப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.