Home இந்தியா சுனந்தா மரணம் : நீடிக்கும் மர்மங்கள்!

சுனந்தா மரணம் : நீடிக்கும் மர்மங்கள்!

643
0
SHARE
Ad

sunandha

புது டெல்லி, ஜன 19 – மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமே உள்ளது. சமீப காலமாக உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்ட இவர்  மனம் உளைச்சல் காரணமாக  தற்கொலை செய்திருக்கலாம் என பல யூகங்களும்  மர்மங்களும் நீடித்துக் கொண்டே வருகின்றன.

சுனந்தா இறந்த உடலை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் தங்களின் அறிக்கையில் உறுதியான முடிவை எதுவும் அறிவிக்க மறுத்து விட்டனர். இந்த மரணம் எதிர்பாராத விதமாக நடந்திருக்கிறது. இது இயற்கை மரணத்திற்கு எதிரானதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், மருத்துவ பரிசோதனையின்போது இவரது உடலில் சில காயங்கள் காணப்பட்டது . இந்த காயங்களும் இறப்புக்கு காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று குழம்பி உள்ளனர் மருத்துவர்கள். அதுமட்டுமின்றி, மருத்துவர்கள் சுனந்தா விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் ஏதும் இல்லை.  இருப்பினும், சில மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. எனவே 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகுதான் முழு விவரத்தை தெரிவிக்க முடியும் என்று கூறிவிட்டனர். உடல் பரிசோதனைக்கு பிறகு சுனந்தாவின் உடல் அமைச்சர் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனைவி சுனந்தா புஷ்கர் திடீர் மரணத்தால் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சுனந்தாவின் முழுமையான உடல் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவரது இறப்பின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  விவரங்கள்:

மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சசிதரூர்

ஏற்கனவே 2 மனைவிகளை விவாகரத்து செய்து கொண்ட சசிதரூர் தொழில் அதிபரான கணவனை இழந்த சுனந்தா புஷ்கரை காதல் திருமணம் செய்து கொண்டார். தரூருக்கு பாகிஸ்தான் பெண் நிருபருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா சந்தேகமுற்றார். சசி தரூர் உண்மையற்றவராக இருந்து வருகிறார் என டுவிட்டரில் 2 நாட்களுக்கு முன்தான் சுன்நதா விமர்சித்திருந்தார். இந்நிலையில் டில்லி நட்சத்திர தங்கும் விடுதியில் அவர் மர்ம முறையில் இறந்து கிடந்தது மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

காவல்துறை விசாரணை

சுனந்தா மரணம் குறித்து காவல்துறையினருக்கு எவ்வித முழு தகவலும் கிடைக்கவில்லை. இவரது உடலில் காயங்கள் எதுவுமில்லை. இவர் தற்கொலையா அல்லது கொலையா என்றும் சந்தேகம் நீடிக்கிறது. சுனந்தா தங்கியிருந்து தங்கும்விடுதியில் வைக்கப்பட்டிருந்த ரகசிய காமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இரங்கல்

தொடர்ந்து, சுனந்தாவின் திடீர் மரணம் குறித்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.