கோலாலம்பூர், ஜன 22- உலக சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாயிலாக சுற்றுலா துறை வளர்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது. 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2013ம் ஆண்டில் அதிகளவில் மக்கள் சுற்றுலா சென்று வந்ததுள்ளனர் என அவ்வறிக்கை காட்டுக்கின்றது.
கடந்தாண்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் இருந்தது. இருப்பினும் 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2013ம் ஆண்டில் உலக அளவில் சுற்றுலா சென்றோர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை நூறு கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் சுற்றுலாக்கள் பல நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவியுள்ளன என்றும், ஆசியா, பசிபிக், ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்கின்றனர் எனவும் உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.