Home உலகம் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

503
0
SHARE
Ad

Thailand-Protest

பாங்காக், ஜன 22- தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

பாங்காக்கில் தற்போதைய நிலவரத்தை கவனத்தில் கொண்டு, அவசர நிலை பிரகடனம் செய்ய அமைச்சரவை முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

பாங்காக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் 60 நாட்கள் அமலில் இருக்கும். இந்த விவகாரத்தில் ராணுவத்தை ஈடுபடுத்தும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது.

இந்த அவசர நிலை இன்று முதல் அமலுக்கு வரும் எனறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் ஊடரங்கு உத்தரவு, அதிரடி சோதனை, விசாரணை இல்லாமல் கைது நடவடிக்கை, ஊடக கட்டுப்பாடு, 5 பேருக்கு மேல் ஒன்று சேரும் அரசியல் கூட்டங்களுக்கு தடை உள்ளிட்ட அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுகிறது.