Home உலகம் சிரியாவில் 11 ஆயிரம் பேர் சுட்டுக்கொலை- அதிர்ச்சித் தகவல்!

சிரியாவில் 11 ஆயிரம் பேர் சுட்டுக்கொலை- அதிர்ச்சித் தகவல்!

465
0
SHARE
Ad

syria

வாஷிங்டன், ஜன 22- சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளி குழுக்கள் 3 வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர்.

இந்த சண்டையின் போது பிடிபட்ட 11 ஆயிரம் போராளிகளை சிரியா அரசாங்கம் கொடுமை படுத்தி மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது என்று அமெரிக்கா மற்றும் ஐ.நா. திகிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் ஜெனிவா II அமைதி பேச்சுவார்த்தை இன்று நடக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இது, அதிபர் பஷர் அல் ஆசாத்தின் 40 வருடகால ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர தேவையான முக்கிய குற்றச்சாட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐ.நா.வின் குற்றச்சாட்டை  நம்பத்தகுந்ததில்லை என்று மறுத்துள்ள சிரியா அரசு போராளிகளுக்கு நிதி உதவி அளித்துவரும் கதார் நாடு தயாரித்துள்ள அறிக்கை இது என்று குற்றம் சாட்டியுள்ளது.