Home இந்தியா சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

561
0
SHARE
Ad

Shivaji Statue2301

#TamilSchoolmychoice

சென்னை, ஜனவரி 24 – கடந்த சில வாரங்களாக சர்ச்சையில் சிக்கியிருந்த மெரினா கடற்கரையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அரசு அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் மெரினா கடற்கரைப்பகுதியில் காமராஜர்சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் சிலை அகற்றப்பட வேண்டுமென சென்னையை சேர்ந்த சீனிவாசன்என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சிலையை அகற்ற தமிழக அரசிற்கு நேற்று உத்தரவிட்டது.

நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, கே.கே. சசிதரன்ஆகியோர் கொண்ட அமர்வு எவ்வளவு விரைவில் அச்சிலையை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவில்அகற்றலாம் என்று கூறியிருக்கிறது.

சிலையை அகற்றக் கூடாது என சிவாஜி கணேசன் சமூகப்பேரவை எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தது.

திமுக ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டநடிகர் சிவாஜி கணேசனின்முழு உருவச் சிலையால் அந்தப் பகுதியில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன, எனவே அதனை அங்கிருந்து அகற்றிவிடலாம் என சென்னை மாநகர காவல்துறையின்போக்குவரத்துப் பிரிவு கூறியுள்ளது.

எனவே, சிலையை மெரினா கடற்கரையில் வேறொருஇடத்திற்கு மாற்றிவிடலாம் என்றும் சாலை போக்குவரத்து நலன் கருதி இந்தநடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சாலை என்பதே அதனைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்காகவே தவிர சிலை எழுப்ப அல்ல என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

சிவாஜியின் சிலை கடற்கரை சாலையில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2006 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.