Home உலகம் அமெரிக்கா காற்சட்டைகளில் விநாயகர் படம்- மக்கள் கண்டனம் !

அமெரிக்கா காற்சட்டைகளில் விநாயகர் படம்- மக்கள் கண்டனம் !

646
0
SHARE
Ad

ganeshas-dream-closeup

வாஷிங்டன், ஜன 25- அமெரிக்காவின் அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் காற்சட்டை வகைகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

காற்சட்டைகளின் பின்புறங்களிலும், கால்பகுதிகள் மற்றும் காலுறைகளிலும் விநாயகக் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது இந்துக்களிடையே கோபத்தை எழுப்பியது. இது இந்து மதக் கடவுளை இழிவுப்படுவதாக அமைகிறது என கண்டனங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

ganesan 1

இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து விநாயகர் உருவம் போட்ட காற்சட்டை வகை விளம்பரத்தை அமெரிக்க நிறுவனம் நீக்கியுள்ளது.

கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் இத்தகைய விளம்பரங்கள் அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.