Home நாடு தன்னைத் தாக்கியவரை மன்னித்தார் கமலநாதன் !

தன்னைத் தாக்கியவரை மன்னித்தார் கமலநாதன் !

507
0
SHARE
Ad

P.KAMALANATHAN-300x221கோலாலம்பூர், ஜன 27 – தன்னைத் தாக்கிய உலு சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவுச் செயலாளர் முகமது ரிசுவான் சுகாய்மியை தான் மன்னித்து விட்டதாக துணை கல்வியமைச்சரும், உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.கமலநாதன் அறிவித்துள்ளார்.

அச்சம்பவம் தனக்கும், முகமது ரிசுவானுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட விவகாரம் என்றும், உணர்ச்சி வசத்தால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது என்றும் நேற்று தனது அறிக்கையில் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

“ஜோகூரில் ஆசிரியையாகப் பணியாற்றும் தனது மனைவியை உலுசிலாங்கூருக்கு இடமாற்றம் செய்யுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். இது கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட விவகாரம் எனவே நீங்கள் கல்வியமைச்சிடம் முறையீடு செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு உணர்ச்சிவசப்பட்டு அவர் அப்படி நடந்து கொண்டார். தவறு செய்வது மனித இயல்பு, இந்த விவகாரத்தை இனியும் பெரிது படுத்த வேண்டாம் என்று பொதுமக்களையும்,ஊடகங்களையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று கமலநாதன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது என்றும், அந்த விசாரணையில் தான் தலையிடமாட்டேன் என்றும் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

உலுசிலாங்கூரில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடந்த கிளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கமலநாதன் உலுசிலாங்கூர் அம்னோ உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டார்.இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.