Home உலகம் பொருளாதாரத்தில் வலுவான நாடாக பாகிஸ்தான் மாறும்: ஜோன் கெரி

பொருளாதாரத்தில் வலுவான நாடாக பாகிஸ்தான் மாறும்: ஜோன் கெரி

483
0
SHARE
Ad

John Kerry waves after delivering speech in Tokyoவாஷிங்டன், ஜன 28- வருங்காலத்தில்  பாகிஸ்தான்  பொருளாதாரத்தில் வலுவான நாடக மாறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி  தெரிவித்துள்ளார்.  பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்த்து சீர்திருத்தங்கள் செய்து அவர்களை வளர்த்தோமேயானால் கண்டிப்பாக இது சாத்தியம் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை அடுத்து இந்த இருநாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை வளர தொடங்கியது. ஆனால் அல்கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் இரு நாடுகளுக்கிடையே இருந்த இந்த நம்பிக்கை உடைய தொடங்கின.

எனினும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தான் மக்களுடன் ஒரு வலுவான உறவு வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. இந்த இருநாட்டு கூட்டுறவால் ஆப்கான் போரை வெல்ல முடியும் என்று கெரி நம்பிக்கை தெரிவித்தார்.