கோலாலம்பூர், ஜன 30- எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் அருகம்புல் சாறு திகழ்கிறது. அருகம்புல் சாறு குடித்த மறுகணமே உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போல தோன்றும்.
அருங்கபுல் சாறு ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மேலும், அருகம்புல் சாறு மலச்சிக்களை தீர்க்கும் தன்மை வாய்ந்தது. இதை தவிர்த்து, அருகம்புல் சாறு இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது.
இச்சாறை அருந்துவதால் இரத்ததில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கும். மேலும்இச்சாறு வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கின்றன. ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி உடலிலுள்ள நச்சுத்தன்மைய அகற்றி கொழுப்பு சத்தை குறைக்கின்றன.