Home இந்தியா ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க விஜயகாந்த் தீவிரம்?

ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க விஜயகாந்த் தீவிரம்?

519
0
SHARE
Ad

120326061730_Vijayakanth-1சென்னை, பிப் 6 – லோக்சபா தேர்தலில் தேமுதிக வுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சியும், திமுக வும் முயற்சித்து வரும் வேளையில், தனது இறுதி முடிவை உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மூன்றாவது அணி அமைத்து பிரதமராகும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவை தகர்க்க வேண்டும் என்பதில் விஜயகாந்த் மிகத் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று பாஜக தலைமைக்கு தூது அனுப்பி விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice