Home நாடு காஜாங் இடைத்தேர்தலில் சாஹிட் மகள் போட்டியிட விருப்பம்!

காஜாங் இடைத்தேர்தலில் சாஹிட் மகள் போட்டியிட விருப்பம்!

621
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர், பிப் 8 – உள்துறை அமைச்சர் அகமட் சாஹித் ஹமீடியின் மகள் நூருல் ஹிடாயா, காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்று சினார் ஹரியார் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து நூருல் கூறுகையில், “நான் போட்டியிட விரும்புகின்றேன். அது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கு மேல் என்னால் கூறமுடியாது. கட்சி மேலிடம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காஜாங் தொகுதி பாரம்பரியமாக தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மசீச விற்கு தான் வழங்கப்பட்டு வருகின்றது. அக்கட்சியும் தற்போது சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, போட்டியிடும் தனது விருப்பத்தை நண்பர்களிடம் மட்டுமே கூறியதாகவும், ஆனால் ஊடகங்களுக்கு அந்த செய்தி கிடைத்தது பற்றி தனக்கு தெரியாது என்றும் நூருல் ஹிடாயா குறிப்பிட்டுள்ளார்.

“நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. அதனால் மேற்கொண்டு எந்த கருத்தையும் நான் வெளியிடப்போவதில்லை. தேசிய முன்னணி என்னை வேட்பாளராக நியமித்தால் அது வேறு. தேசிய முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் என் தந்தையின் உணர்வுகளை காயப்படுத்தவோ அல்லது எங்களது உறவை கெடுத்துக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. நான் அவருக்கு உண்மையான மதிப்பளிக்கின்றேன்.” என்று நூருல் ஹிடாயா கூறியுள்ளார்.