Home உலகம் ஜப்பானில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு!

ஜப்பானில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு!

594
0
SHARE
Ad

t1larg.japan.snow.gi.afpடோக்கியோ, பிப் 10 – ஜப்பான் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் பனிப்பொழிவு 27 செ.மீ அளவிற்கு பதிவாகியுள்ளதாக டோக்கியோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக சாலை விபத்துகளில், ஏழு பேர் உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

வீட்டு கூரைகளில் குவிந்த பனி குவியலை, அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், கீழே விழுந்து காயமடைந்து உள்ளதாக ஜப்பான் நாட்டு பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

கடும் பனிப்பொழிவு காரணமாக சுமார் 740 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.