Home உலகம் இங்கிலாந்தில் மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயல்!

இங்கிலாந்தில் மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயல்!

540
0
SHARE
Ad
windy-weather_2713052bலண்டன்; பிப், 13-  கடந்த 1766 ஆம் ஆண்டு வானிலைப் பதிவுகள் தொடங்கியது நாள் முதல் இந்த ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் ஜனவரி மாதம் தான் இங்கிலாந்தில் அதிக பட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய காற்றும்,மழையும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியையே மூழ்கடித்துள்ளன.

தாழ்வான நிலப்பரப்பைக் கொண்ட சோமர்செட் தொடர்ந்து நீரினால் சூழப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் அதிகரித்த வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் கரைகள் உடைந்து லண்டனுக்கு மேற்கில் உள்ள தேம்ஸ் பள்ளத்தாக்கு நீரில் மூழ்கியுள்ளது.

இதனிடையில் நேற்று மணிக்கு 106 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிப் புயலும்,மழையும் அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளைத் தாக்கியுள்ளன. இதனால் ஏராளமான மரங்கள் சாய்ந்து, சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் சென்றுகொண்டிருந்த டிரக்குகள் கவிழ்ந்துள்ளன. பெரும்பான்மையான ரெயில் போக்குவரத்து மூடப்பட்டது.

ரெயிலில் பயணிகள் பயணிக்க வேண்டாம் என்ற அறிவிப்புகள் ரெயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  வானிலை தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள இங்கிலாந்து வானிலை மையம் இதற்கான காரணங்களாக உலக வெப்பமயமாதலையும், காலநிலை மாற்றங்களையுமே குறிப்பிடுகின்றது.

#TamilSchoolmychoice

இந்த சான்றுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கான வெளிப்படையான அறிவிப்பாகத் தோன்றுவதாக வானிலை மையத்தின் முக்கிய விஞ்ஞானியான ஜூலியா ஸ்லிங்கோ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.