Home அரசியல் திருச்சியில் 200 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு – தி.மு.க. மாநாடு

திருச்சியில் 200 ஏக்கரில் பிரமாண்ட ஏற்பாடு – தி.மு.க. மாநாடு

1339
0
SHARE
Ad

15-trichy-dmk-conference-photos34-600திருச்சி,15-trichy-dmk-conference-photos37-600பிப் 15- திருச்சியில் தி.மு.க.வின் 10- வது மாநில மாநாட்டை கருணாநிதி தொடக்கிவைத்தார். திருச்சியில் உள்ள திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10- வது மாநில மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகின்றன.

இதற்காக அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்திற்கு அண்ணாநகர் என்றும் மாநாட்டு திடலுக்கு தந்தை பெரியார் என்றும் பெயரும் சூட்டப்பட்டு உள்ளன.

மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினமே திருச்சி வந்தடைந்தார். நேற்று மாநாட்டு திடலுக்கு சென்று பார்வையிட்டார். மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் . பந்தலின் முகப்பில், தி.மு.க. கொடியை கருணாநிதி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

#TamilSchoolmychoice

அப்போது இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணியினரின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்பு மரியாதையை கருணாநிதி ஏற்று கொள்கிறார். அதன் பின்னர் தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மாநாட்டு பந்தலில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சிகள்.  காலை 11.30 மணிக்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தந்தை பெரியார் படத்தை கழக வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரனும், அண்ணா உருவபடத்தை திருச்சி சிவா எம்.பி.யும், சர்.பிட்டி தியாகராயர் படத்தை சபாபதி மோகனும், டி.எம்.நாயர் படத்தை கோவை மு.ராமநாதனும், டாக்டர் நடேசனார் படத்தை ஆலந்தூர் பாரதியும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்தை கவிதை பித்தனும், மூவாலூர் மூதாட்டியார் படத்தை சுப்புலட்சுமி ஜெகதீசனும், சத்தியவாணிமுத்து படத்தை நூர்ஜகான்பேகமும், மொழிப்போர் தியாகிகள் உருவபடத்தை பொன்முடியும் திறந்து வைத்து பேசுகின்றனர். அத்துடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.