Home நாடு காஜாங்கில் அன்வாரை ‘புதைத்து’ விடுகிறோம் – மசீச சபதம்

காஜாங்கில் அன்வாரை ‘புதைத்து’ விடுகிறோம் – மசீச சபதம்

674
0
SHARE
Ad
liow-tiong-lai5-june7_400_267_100

கோலாலம்பூர், பிப் 17 – காஜாங் இடைத்தேர்தலை வேண்டுமென்றே உருவாக்கிய எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை அந்த இடத்திலேயே புதைத்து விடுவதாக மசீச தலைவர் லியாவ் தியாங் லாய் சூளுரைத்துள்ளார்.

சுங்கை சுவாவில் நடந்த மசீச வின் தேர்தல் நடவடிக்கை தொடக்க விழாவில் பேசிய லியாவ், “அவர் குழியை தோண்டியுள்ளார். பரவாயில்லை, நாம் அவரை அங்கேயே புதைப்போம்” என்று கூறியுள்ளார்.

“ஜனநாயக முறையை பாழ்படுத்தி, இடைத்தேர்தலை உருவாக்கியுள்ள, அவரை அந்த தொகுதியில் வெற்றியடைய விடக்கூடாது” என்றும் லியாவ் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சுங்கை சுவாவின் பொது தேர்தல் மையத்தை சுற்றி, 9 சிறிய தேர்தல் நடவடிக்கை மையங்களை ஏற்படுத்தியுள்ளதாக லியாவ் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அம்மாநில மக்களுக்கு பெரும் அதிருப்தி என்றும், பிகேஆரில் உள்ள உட்கட்சி பூசலின் காரணமாக காஜாங் இடைத்தேர்தல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் லியாவ் தெரிவித்தார்.