Home இந்தியா ராஜிவ் கொலைவழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தடை!

ராஜிவ் கொலைவழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க தடை!

524
0
SHARE
Ad

downloadபுதுடெல்லி, பிப் 21 -ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் மேலும் 4 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக தடை விதித்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரன்ஜன் கோகாய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய குழு நேற்று அளித்த உத்தரவில், கொலை குற்றவாளிகள் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு                                                                                                                                     பிறப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் மற்ற நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இதை எதிர்த்து மத்திய அரசு நேற்று மேல் முறை யீடு மனு தாக்கல் செய்தது.

இதை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா நடைமுறைகளையும் மாநில அரசு முறையாக பின்பற்றவில்லை.

ஆகையால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எழுப்பியுள்ள சட்ட சிக்கல்களை இந்த நீதிமன்றம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தண்டனையை குறைக்கும் மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில், சட்ட நடைமுறைகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

“சட்ட நடைமுறைகளை மாநில அரசு பின்பற்றாத குறைபாடுகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தை விரிவாக ஆராய வேண்டியுள்ளது. எல்லா மாநிலங்களும் சட்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

“மாநில அரசின் அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை. ஆனால், மாநில அரசு கடைபிடித்த சட்ட நடைமுறைகளை விரிவாக பரிசீலனை செய்ய உள்ளோம். என்று அந்தக் குழு கூறியது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.