Home கலை உலகம் ஏ.ஆர்.ரஹ்மானின் செய்தியாளர் சந்திப்பு! தமிழ்ப் பத்திரிக்கைகள் கடும் அதிருப்தி!

ஏ.ஆர்.ரஹ்மானின் செய்தியாளர் சந்திப்பு! தமிழ்ப் பத்திரிக்கைகள் கடும் அதிருப்தி!

681
0
SHARE
Ad

AR Rahman @ German Concert Tour PMகோலாலம்பூர், பிப் 21 – மலேசியாவில் நடக்கும் தனது இசை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பிற்காக நேற்று முன்தினம் கோலாலம்பூர் வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இங்குள்ள தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்களுக்கு மட்டும் பேட்டியளிப்பதைத் தவிர்த்தாகக் கூறப்படுகிறது.

இதனால் பெரும் அவமதிப்பிற்கும், வருத்தத்திற்கும் உள்ளான தமிழ் பத்திரிக்கையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிற மொழி இணையத்தளங்களுக்கும், தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர்களுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , தமிழ் நாளிதழ்களுக்கு மட்டும் அனுமதி வழங்காதது மிகவும் வருத்தமளிக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் நிச்சயம் ஏ.ஆர்.ரஹ்மானின் காதுகளுக்கு எட்டியிருக்கும் என்று நம்பப்படுகின்றது. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி, கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் இது குறித்து விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.