Home இந்தியா விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு-உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

விஜயகாந்துக்கு எதிரான தேர்தல் வழக்கு-உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

609
0
SHARE
Ad

Vija_0புதுடெல்லி, பிப்  21 – கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜெயந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயந்தி மேல் முறையீடு செய்தார். இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜயகாந்த் வெற்றிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

காலதாமதமாக மேல் முறையீடு செய்ததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.