Home இந்தியா இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் -கருணாநிதி

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் -கருணாநிதி

373
0
SHARE
Ad

karuna_1375724fசென்னை, பிப் 26 – திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை பிப்ரவரி 26 ஆம் தேதி  ஈழத் தமிழர்கள் நீதி கேட்கும் நாள் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

2012-ஆம் ஆண்டு, பிரிட்டானியப் நாடாளுமன்றத்தில் கூடிய, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய பல தமிழ் அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் தொண்டு நிறுவனங்களாலும் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி முழுமையான சர்வதேச சுதந்திரமான விசாரணையை, ஐநாவில் அங்கம் வகிக்கும் நாடுகள் மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

டெசோ அமைப்பின் சார்பிலும், திமுக சார்பிலும் சர்வதேச விசாரணை வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. டெசோ அமைப்பில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகனிடம் நேரில் கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அண்மையில் திருச்சியில் நடைபெற்ற திமுக 10-ஆம் மாநில மாநாட்டில் சர்வதேச விசாரணை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் கேட்டு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பயணம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைத்திருக்கும் வேளையில், ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்காமல் இருப்பது உலக சரித்திரத்தின் சோகமாகவே கருதப்படுகிறது.

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் விரைவில் கிடைத்திட சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை ஏற்படுத்திட அவர்கள் வாழும் நாடுகளின் அரசை வற்புறுத்திட இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.