Home நாடு காலிட் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை – மை வாட்ச்

காலிட் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை – மை வாட்ச்

452
0
SHARE
Ad

SANJEEVAN-685x320கோலாலம்பூர், பிப் 27 – தனக்குக் கீழ் உள்ளவர்களின் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் சொல்வதில் இருந்து, காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிகின்றது என்று மை வாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீ சஞ்சீவன் (படம்) தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஞ்சீவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “காலிட்டின் அந்த ஒரு அறிக்கை போதும். காவல்துறை அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது.” என்று கூறினார்.

குற்றங்களுக்கு எதிரான அமைப்பான ‘மை வாட்ச்’, ஊழலில் ஈடுபடும் காவல்துறையினரை பற்றிய காணொளி ஆதாரங்களை வெளியிட்டதாகவும், ஆனால் காலிட் அது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சஞ்சீவன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

காலிட்டின் சொந்த ஊரான மண்டின், ஒரு மிகப் பெரிய போதை விற்பனை மையமாக உள்ளது. அதே நேரத்தில் அதன் அருகே உள்ள நகரமான சிரம்பானில் 100 க்கும் மேற்பட்ட சூதாட்ட மையங்கள் உள்ளன என்றும் சஞ்சீவன் தெரிவித்தார்.

தனது சொந்த ஊரையே பாதுகாப்பாக வைக்கத் தெரியாத காலிட்டின் மீது, தேசத்தை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எப்படி வரும் என்றும் சஞ்சீவன் கேள்வி எழுப்பினார்.

60 காவல்துறையினர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம்  (Malaysian Anti-Corruption Commission) விசாரித்து வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கடந்த திங்கட்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் காலிட் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.