Home கலை உலகம் பேட்டிங்கை விட அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது ரொம்பக் கஷ்டம்-சச்சின்!

பேட்டிங்கை விட அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது ரொம்பக் கஷ்டம்-சச்சின்!

478
0
SHARE
Ad

M_Id_379604_Sachin_Anjali_Tendulkarசென்னை, பிப் 27 – கடிதம் மட்டுமே தொலைத்தொடர்புக்கு என இருந்த காலத்தில், தான் அதிக கடிதங்கள் எழுதியதாக நினைவு கூர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பேட்டிங் செய்வதை விட தனது மனைவி அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது கடினம் என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் பள்ளிக் குழந்தைகளுக்கான கையெழுத்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதில் கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் ஆராதிக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகளிடையே தன்னுடைய கடிதம் எழுதிய காலங்கள் பற்றிய தனது பழைய நினைவுகளை டெண்டுல்கர் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது. செல்பேசி இல்லாத எனது இளமை நாட்களில் நினைத்தவுடன் அனைவரையும் தொடர்பு கொள்வது இயலாத காரியம்.

#TamilSchoolmychoice

தொலைபேசி மற்றும் கடிதம் மட்டுமே தொலைத்தொடர்புக்கு வழியாக இருந்தது. எனவே நான் கடிதம் எழுத ஆரம்பித்தேன். முதலில் எனது பெற்றோருக்கும் எனது மனைவிக்கும் கடிதங்கள் எழுதினேன். கிரிக்கெட்டில் பந்தை எதிர்கொள்வது எனக்கு எளிதானது. ஆனால் என் மனைவி அஞ்சலிக்கு கடிதம் எழுதுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

எனது மனைவியின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். அதேபோல் எனது சக கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளேவின் கையெழுத்தும் மிகவும் அழகாக இருக்கும். பார்ப்பவரை உடனே வசீகரித்து விடும் கையெழுத்து அவருடையது. எனது குழந்தைகள் கூட என் வீட்டுச்சுவரில் அழகாக கிறுக்கி எழுதிவைப்பார்கள்.

கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு என்னால் எனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. வாழ்க்கை மிகவும் அழகானது. தற்போதுள்ள குழந்தைகளுக்கு கையெழுத்து பயிற்சி மிகவும் அவசியமானதாகும்” என சச்சின் தெரிவித்தார்.
வலது கை பேட்ஸ்மேனான சச்சின் இடது கையால்தான் எழுதுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.