Home இந்தியா சென்னையில் 3 இடங்களில் ராஜிவ் சிலை உடைப்பு -காங்கிரஸ்,தமிழ் அமைப்பு மோதல்!

சென்னையில் 3 இடங்களில் ராஜிவ் சிலை உடைப்பு -காங்கிரஸ்,தமிழ் அமைப்பு மோதல்!

680
0
SHARE
Ad

1044678180thamilan.lkசென்னை, பிப் 28 – வேப்பேரி, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள மூன்று ராஜிவ் காந்தி சிலைகள் நேற்று காலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த காங்கிரஸார், குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் எதிர் தாக்குதல் நடத்தியது. பயங்கர மோதலில் இரு தரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே இருந்த ராஜிவ் காந்தி சிலையை, நேற்று காலை ஒரு மர்ம கும்பல் சேதப்படுத்தியது. சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள புவனேஸ்வரி திரையரங்கின் அருகே இருந்த ராஜிவ் காந்தி சிலையையும் உடைத்தது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையம் அருகில் இருந்த ராஜிவ் காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது.   இது குறித்து தகவல் rajev-440x250கிடைத்ததும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 100ற்கும் மேற்பட்ட காங்கிரஸார், சிலை முன்பு கூடினர். சிலைக்கு பாதுகாப்பு வழங்காத காவலர்களை கண்டித்தும், ராஜிவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரியும் அந்த பகுதியில் திடீர் சாலை மறியலில் காங்கிரஸார் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று, காங்கிரஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்கள் உறுதியளித்த பிறகு, காங்கிரஸார் கலைந்து சென்றனர்.

Tamil_Daily_News_68555414677இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள ராஜிவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.