Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் 60,418 வாக்குச் சாவடிகள்!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் 60,418 வாக்குச் சாவடிகள்!

540
0
SHARE
Ad

img1140215007_1_1சென்னை, பிப் 28 – நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் 60,418 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க பறக்கும் படை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். வாக்குக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணம் வாங்குதலை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். வாக்குக்காக பணப்பரிமாற்றம் செய்தோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.