Home கலை உலகம் கோச்சடையான் பாடல்களை அமிதாப் பச்சன் வெளியிடுகிறார்!

கோச்சடையான் பாடல்களை அமிதாப் பச்சன் வெளியிடுகிறார்!

593
0
SHARE
Ad

cinekollyசென்னை, பிப் 28 – ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், கோச்சடையான். தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன்பாடல் வெளியீட்டு விழா, மார்ச் 9-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு பாடலை வெளியிடுகிறார்.