Home உலகம் 17 வயது மாணவனைக் காதலித்து மணந்த 35 வயது அமெரிக்க ஆசிரியை கைது!

17 வயது மாணவனைக் காதலித்து மணந்த 35 வயது அமெரிக்க ஆசிரியை கைது!

627
0
SHARE
Ad

28-i-couldn-t-believe-my-luck-17-year-old-s-boast-as-married-teacher-35-600லண்டன்,  பிப் 28 – ஸ்காட்லாந்தில் 17 வயது மாணவனை காதலித்து மணந்த குற்றத்திற்காக 35 வயது ஆசிரியையைப் காவலர்கள் கைது செய்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை பெர்னாட்டி ஸ்மித். இவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனான கேரி ரால்ஸ்டன் என்ற மாணவரைக் காதலித்துள்ளார்.

திருமணம் செய்து கொண்டதாகக் கூறி இருவரும் ஒன்றாக தங்கி இருந்துள்ளனர். இது குறித்துத் தகவல் அறிந்த காவலர்கள்,  திருமணம் வயது ஆகாக சிறுவனை திருமணம் செய்து கொண்டதற்காக தற்போது பெர்னாட்டியைப் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெர்னாட்டி இது குறித்துக் கூறியதாவது, எனக்கும் மாணவன் ரால்ஸ்டனுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக காதல் இருந்து வந்தது. நானும் அவனும் பள்ளியில் ஒன்றாக பேசி சந்தித்து வந்தோம். அவனை திருமணம் செய்து கொண்டதால், தான் மிகுந்த அதிர்ஷடசாலி ஆனேன்.

#TamilSchoolmychoice

நான் மட்டும் சிறையில் எப்படி தனியாக வசிக்க போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்றார். அதேபோல், மாணவன் ரால்ஸ்டன் கூறுகையில், என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.17 வயதுடைய நான் எனது 35 வயது ஆசியரை திருமணம் செய்து கொண்டேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தேன்.

ஆசிரியர் உடன் தங்கி இருந்த போது எனக்கு மகிச்சியாக இருந்தது. தற்போது அவருடன் கழித்த நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாது என்றும் என் வீட்டு முழுவதும் ஆசிரியை புகைப்படம் ஒட்டியுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளான். மேலும், ஆசிரியர் ஜெயிலில் இருந்து திரும்பிய வந்த பிறகு, அவருடன் தான் சேர்ந்து வாழப்போவதாக கூறியுள்ளான் ரால்ஸ்டன்.