Home நாடு இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள்? கணக்கெடுக்கத் தயாரா? – வேதமூர்த்தி

இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தீர்கள்? கணக்கெடுக்கத் தயாரா? – வேதமூர்த்தி

514
0
SHARE
Ad

WAYTHA18_540_363_100கோலாலம்பூர், பிப் 28 – தேசிய முன்னணி இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தது என்பதற்கான ஒரு கணக்கெடுப்பு தான் இந்த காஜாங் இடைத்தேர்தல் என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து வேதமூர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைனும், ம.இ.கா வுடன் இணைந்து  கடந்த 20 வருடங்களில் இந்திய சமுதாயத்திற்காக  அரசாங்கம் என்ன செய்தது என்பதை முழு அறிக்கை வாயிலாக கொண்ட வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” என்று தெரிவித்தார்.

மேலும், “அந்த அறிக்கையை 10 சதவிகித இந்திய மக்கள் உள்ள காஜாங் தொகுதியில் சென்று, பகிரங்கமாக வெளியிட கைரியும், ஹிஷாமுட்தீனும் முன்வந்தால் அதை நான் வரவேற்கிறேன். இந்த ஆய்வை இரு அமைச்சர்களும் செய்ய முன்வந்தால், இதுவரை இந்திய சமுதாயத்திற்கு செய்தவைகள் பற்றி ஒரு அளவீடு தெரியும்” என்றும் வேதமூர்த்தி கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறையில் துணை அமைச்சராக இருந்த போது ஒத்துழைப்பு கொடுக்காத வேதமூர்த்தி, அரசாங்கத்தை விட்டு விலகியவுடன் தேசிய முன்னணியின் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் என்று கைரியும், ஹிஷாமுதீனும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.