மாணவர்களுக்கு அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும். சிப்ஸ், இனிப்பு வகைகள், சாக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளியின் விதிமுறையை தொடர்ந்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் நிர்வாகம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் ரிலோ என்னும் ஆறு வயது மாணவன், தினமும், தனது மதிய உணவாக சிப்ஸ் எடுத்து வந்தான். இதையடுத்து, அந்த மாணவனை, நான்கு நாட்களுக்கு இடைநீக்கம் செய்ய பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.