Home இந்தியா மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலை நிறுத்த ‘ஆம் ஆத்மி’ கட்சி திட்டம்!

மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலை நிறுத்த ‘ஆம் ஆத்மி’ கட்சி திட்டம்!

503
0
SHARE
Ad

db8321f38ee3fa1f9b81c09f10ae4cf0லக்னோ, மார் 3 – நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், நரேந்திர மோடி, முலாயம் சிங் யாதவ், அரவிந்த் , ஆகியோர், உத்திரபிரதேச மாநிலத்தை முற்றுகையிட்டு, நேற்று பிரசாரம் செய்தனர். மூன்று தலைவர்கள், ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ததால் உத்திரபிரதேச மாநிலம், நேற்று அதிர்ந்தது. பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடிக்கு எதிராக, ‘ஆம் ஆத்மி’ கட்சியின் கெஜ்ரிவாலை  போட்டியிட வைத்து, மோடிக்கு இணையாக அவரை கொண்டு வரவும், சரிந்துள்ள செல்வாக்கை சரிகட்டவும், ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு  இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான  நரேந்திர மோடி, ஏற்கனவே  தன் பிரசாரத்தை துவங்கிவிட்டார்.

நாட்டிலேயே அதிகமாக சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கும் உத்திரபிரதேச மாநிலத்தில்தான், 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு, அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே, முக்கிய அரசியல் கட்சிகளின் கவனம் உத்திரபிரதேசத்தை நோக்கி திரும்பியுள்ளது.

#TamilSchoolmychoice

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, லக்னோவிலும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், அலகாபாத்திலும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கான்பூரிலும், நேற்று ஒரே நாளில் பிரசாரம் செய்ததால், ஒட்டுமொத்த உத்திரபிரதேச மாநிலமும், அரசியல் கட்சி தொண்டர்களால் குலுங்கியது.

அரசியல் கட்சி தலைவர்களின் முற்றுகையால்  உத்திரபிரதேச மாநிலத்தில், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. நேற்று உத்திரபிரதேச பொதுக் கூட்டங்களில் பேசிய மூன்று தலைவர்களுமே, எதிர்க்கட்சிகளை, சரமாரியாக தாக்கி பேசியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், பா.ஜ.க.பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்துக்காக, பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  திரண்டிருந்தனர். இதனால், லக்னோ முழுவதும், நேற்று  மனித தலைகளாக தெரிந்தன.