Home கலை உலகம் தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை பச்சையாக வரைந்திருக்கிறார்-த்ரிஷா!

தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை பச்சையாக வரைந்திருக்கிறார்-த்ரிஷா!

632
0
SHARE
Ad

trisaசென்னை, மார் 4 – பாலிவுட் கதாநாயகிகள் தொடங்கி டோலிவுட் கதாநாயகிகள் வரை பிடித்த நபரின் பெயரை பச்சை குத்திக்கொள்வது தற்போது இயல்பாகவுள்ளது. நடிகை நயன்தாரா தனது மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் பிரபு என்று பச்சை குத்தியிருந்தார். காதல் முறிந்த பிறகும் அந்த பெயரை அழிக்காமல் அதே பச்சையுடன் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த பச்சையை அழிக்க முடியாது என்பதால்தான் நயன்தாரா வருத்தப்படுகிறார். த்ரிஷா தனது உடலில் பூ வடிவில் பச்சை குத்தி இருப்பதுடன் முதுகில் தனது ராசி சின்னமான ரிஷபம் வரைந்திருக்கிறார். இந்நிலையில் தொடையிலும், கைகளிலும் ஜெயம் ரவியின் உருவத்தை பச்சையாக வரைந்திருக்கிறார்.

இதை வேறுமாதிரியாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். பூலோகம் படத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். அவரது காதலியாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்துக்காகத்தான் ஜெயம் ரவியின் உருவ பச்சையை த்ரிஷா வரைந்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்ததும் ரவியின் உருவ பச்சையை அழித்துவிட்டார்.

#TamilSchoolmychoice

வழக்கமாக காதலி  தனது காதலன் பெயரை பச்சையாக எழுதிக்கொள்வார்கள். இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக காதலனின் உருவத்தையே காதலி பச்சையாக வரைந்திருப்பதுபோல் படமாக்கினோம். இது போலி பச்சைதான். அதனால் எளிதில் அழித்துவிட்டு, படப்பிடிப்பு நடக்கும்போது மீண்டும் வரையலாம் என படக்குழு தெரிவித்தனர்.