Home இந்தியா நாடு முழுவதும் கூட்டணிக்கு கட்சிகள் கிடைக்காமல் காங்கிரஸ் திணறல்!

நாடு முழுவதும் கூட்டணிக்கு கட்சிகள் கிடைக்காமல் காங்கிரஸ் திணறல்!

488
0
SHARE
Ad

21-1358745683-rahul-sonia-600டெல்லி, மார் 5 – வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டின், எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும், காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள கட்சிகளும், விலகி ஓடுகின்றன. இதனால், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி அமைக்க  போதுமான கட்சிகள் கூட கிடைக்காமல் திணறும் நிலை, காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.

குஜராத் முதல்வர்  நரேந்திர மோடியை  பிரதமர் வேட்பாளராக அறிவித்ததோடு தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை பா.ஜ.க. துவங்கியது. ஆரம்பத்தில், தொய்வு காணப்பட்டாலும் இப்போது, பா.ஜ.க.வின் முயற்சிக்கு பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில் பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்களை  தங்கள் கூட்டணிக்குள் பா.ஜ.க. கொண்டுவந்துள்ளது.

அதுபோல், மேலும்  பல கட்சிகள்  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் என அக்கட்சியின் தலைவர்கள்  நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால்  இதற்கு முற்றிலும்  நேர்மாறாக  காங்கிரசின் நிலை உள்ளது. புதிய கூட்டாளிகளும் கிடைக்காமல்  பழைய நண்பர்களும்  விட்டு விலகி ஓடும் நிலை, அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் காணப்படுகிறது.

#TamilSchoolmychoice

எந்த கட்சி வந்தாலும்  வராவிட்டாலும்  காங்கிரஸ் கூட்டணியில், லாலு பிரசாத்தின்  ராஷ்ட்ரிய ஜனதாதளம் இடம் பெறுவது உறுதி என்ற நிலை இருந்தது. ஆனால், தொகுதி பங்கீட்டில் விட்டுக் கொடுக்கும் போக்கு இல்லாததால், பீகாரில் இன்னும் இழுபறி நிலை தான் காணப்படுகிறது.

இயற்கையான கூட்டணி  என அறிவிக்கப்பட்ட லாலு கட்சியும், காங்கிரசும் கூட, கூட்டணியில் இணைய முடியாத நிலை காணப்படுகிறது. ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுத்தால், காங்., தலைமையிலான கூட்டணியில் சேர தயாராக இருந்த ராம்விலாஸ் பஸ்வானை, காங்கிரஸ் மற்றும் லாலு கட்சி புறக்கணித்ததால், அந்த கூட்டணியிலிருந்து பஸ்வான் வெளியேறிவிட்டார்.

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என  நிதிஷ்குமார் கூறுவதை வைத்து அவரை வளைக்கலாம் என  கருதினாலும்  இந்த கூட்டணியும் உருவாக  வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதுவும், பேச்சுவார்த்தை அளவிலேயே நின்றுவிடும் என, முக்கிய காங்கிரஸ் தலைவர்களே கூறுவதால்  பீகாரில் கடந்த முறை போல், காங்கிரஸ் தனித்தே போட்டியிட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டணி குறித்து  தி.மு.க. மேலிடத் தலைவர்களிடம்  அகமது படேலும், குலாம் நபி ஆசாத்தும் பேசி வருவதாக, இன்னும் மேலிடத்தில் பேச்சுவுள்ளது. இரண்டு, மூன்று இடங்களுக்கு மேல் தர முடியாது. அதுவும், தே.மு.தி.க,வை அழைத்து வந்தால் மட்டுமே, அடுத்து பேச முடியும் என, தி.மு.க. தரப்பில் கூறிவிட்டதால்  இதிலும், இழுபறி காணப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் உருவானால், கட்சியை இணைப்பேன் என்று கூறிய டி.ஆர்.எஸ். தலைவர்  சந்திரசேகர ராவ், இப்போது, பின்வாங்கியுள்ளார். முதல்வர் பதவி  எனக்குத்தான் வேண்டும். அதை  விட்டுத்தர முடியாது என கூறி விட்டு  இணைப்பு விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராவ், கூட்டணி குறித்து, பிறகு பார்ப்போம் என்கிறார்.

ஐந்து எம்.பி.க்களோடு இருக்கும் அஜித் சிங், மற்ற கட்சிகளின் பாணியில் பா.ஜ.கவுடன்  ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  இருப்பினும் இதுவரை பலனில்லை. கடந்த 1998-ல் வாஜ்பாய் அரசு கவிழ்க்கப்பட்டது. அப்போது சோனியாவை பிரதமராக்க முன் வந்த மாநில கட்சிகளை வெளியில் இருந்து ஆதரவு அளிக்கச் சொன்னது காங்கிரஸ்.

அப்போது  எல்லா கட்சிகளுமே வெளியேறின. அப்போதிருந்து  2003-ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகளாக  காங்கிரசுக்கு  கூட்டணி கட்சிகள் என  எந்த கட்சிகளுமில்லை. அதுபோன்ற நிலைமை  இப்போது ஏற்பட்டுள்ளது என டெல்லி நிருபர்கள் கூறினர்.