இந்த அருங்காட்சியகத்தில் விஷ்ணு, நடராஜர் வடிவில் சிவன், ராமர், துர்கை, நடன கணேசர், கார்த்திகேயர், காளி, பைவரவர், இந்திரன், காமதேனு, நந்தி, சூரியன் ஆகிய சிலைகளம் உள்ளன. 1876-ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 2 லட்சத்து 27 ஆயிரம் கலைப்பொருட்களுடன், ஓவியம், சிலைகள், காகித வேலைப்பாடுகள், புகைப்படங்கள், அல்ஙகார கலைகள், துணி ரகங்கள், மற்றும் கட்டட கலை தொடர்பான 200 பகுதிகளைக் கொண்டுள்ளது.
இங்கு இந்து மண்டபம் மற்றும் சிலைகள் பராமரிக்கப்படுவதைப் பாராட்டியுள்ள பிரபஞ்ச இந்து சமதாயத்தின் தலைவர் ராஜ்ன ஜெட், இது போன்று அமெரிக்காவிலுள்ள இதர அருங்காட்சியகங்களும் இந்து மதத்தின் சிறப்பை விளக்கும் சிற்பங்களையும், கலைப் பொருட்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.