சமீபத்தில் நான் நடித்த சத்யமேவ ஜெயதே என்ற படம் டி.வியில் ஒளிபரப்பானது. அதை பார்த்த போது பழைய ஞாபகம் வந்துவிட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அப்படத்தில் நடித்த ராஜசேகர், கை துப்பாக்கியுடன் வந்திருந்தார். அதை கண்டு பயந்து விட்டேன். அன்று முதல் டோலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன் என குறிப்பிட்டிருந்த அவர், சில மணி நேரத்தில் அந்த தகவலை இணைய தள பக்கத்தில் இருந்து நீக்கினார்.
மேலும் அவர் கூறும்போது, விரைவில் தெலுங்கு படங்களில் நடிக்கவுள்ளேன். நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா நடித்திருக்கும் மனம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். நாகார்ஜுனா நடிக்கும் மற்றொரு படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளேன் என்றார்.