Home இந்தியா கேரள மாநில ஆளுநராக முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நியமனம்!

கேரள மாநில ஆளுநராக முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நியமனம்!

763
0
SHARE
Ad

Sheila Dikshit 300 x 200 புதுடில்லி, மார்ச் 5 – இந்திய அரசியல் வட்டாரங்களின் ஆரூடங்களின்படி  கேரள மாநில ஆளுநராக (கவர்னராக) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 1998ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லிமுதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். காங்கிரஸ் முக்கிய தலைவர்களில்ஒருவரான ஷீலா தீட்சித், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நெருக்கமானவர். 75 வயதான ஷீலா தீட்சித், இந்த முறை டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிகட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார்.

தனது ஆரம்ப கால ஆட்சியின் போது சிறந்த நிர்வாகத் திறமைக்காக பலரது பாராட்டுதல்களை ஷீலா தீட்சித் பெற்றாலும், பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எதிராகப் புறப்பட்டுக் கிளம்பிய எதிர்ப்புகளினால், டெல்லி அரசியலில் மக்களின் செல்வாக்கையும் இழந்தார். அண்ணா ஹசாரேயின் வரவு, தொடர்ந்து நடந்த போராட்டங்களினால் உயர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு ஆகிய காரணங்களால் ஷீலா தீட்சித் அண்மையில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் செல்வாக்கை இழந்து படு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், ஷீலா தீட்சித்தை கேரள கவர்னராகநியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார்.முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயை ஷீலா தீட்சித்சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கவர்னராக நியமிக்கப்படுவது குறித்துஷிண்டே தெரிவித்தார். இது வரை கேரள கவர்னராக இருந்த முன்னாள் டெல்லி போலீஸ்கமிஷனர் நிகில்குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நிகில் குமார் கடந்த ஆண்டுமார்ச்சில்தான் அவர் கேரள கவர்னராக பதவியேற்றார். அதற்கு முன்பு நாகலாந்துகவர்னராக பணியாற்றினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தனது அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் கட்சி அவசரம் அவசரமாக இந்த நியமனத்தைச் செய்துள்ளதாக இந்திய அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.