இது காங்கிரசாருக்கு அதிருப்தியை தந்தது. விஜயகாந்த் டெல்லி சென்றதால் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பின்பு பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தேமுதிக தொடர்ந்து பாஜகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தது. பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்றிரவு விஜயகாந்த் பாஜகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர். எனவே பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகிவிட்டது. திமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது.
அதிமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வெளியேறி தனித்து போட்டி என அறிவித்துவிட்டனர். இப்படி ஒவ்வொரு கட்சிகளாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இதனால் காங்கிரசுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. இது காங்கிரசாருக்கு தவிப்பை ஏற்படுத்தியுள்ளது.