இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 60 மாணவர்களை வெளியேற்றி தங்கும் விடுதியை காலி செய்ய சொன்னது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீது பல்கலைக்கழக வேந்தர் பி.கே.கார்க் கொடுத்த புகாரின் பேரில் மீரட் காவலர்கள் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.
Comments