Home கலை உலகம் வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ கோடைவிடுமுறை வெளியீட்டு!

வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ கோடைவிடுமுறை வெளியீட்டு!

647
0
SHARE
Ad

84சென்னை, மார் 7 – கோடை விடுமுறையை முன் வைத்து, தற்போது  பல படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கோச்சடையான், விஸ்வரூபம், ஐ ஆகிய படங்கள் தயாராகியுள்ளன. கூடுதலாக வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படமும் கோடைவிடுமுறையில் வெளியாகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்  வடிவேலு  நடித்து வந்த படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்.இப்படமும் கோடைவிடுமுறை வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. கோடை விடுமுறையில் பல பிரபலங்களின் படங்களும் வெளியான போதும்  படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால்  தாமதிக்காமல் தெனாலிராமனையும் களமிறக்குகின்றனர் என தயாரிப்பாலர் சங்கம் தெரிவித்தது.