Home உலகம் லிட்டருக்கு 35 கிமீ ஓடும் எலியோ காருக்கு அதிகமான முன்பதிவு!

லிட்டருக்கு 35 கிமீ ஓடும் எலியோ காருக்கு அதிகமான முன்பதிவு!

563
0
SHARE
Ad

07-1394194572-elio-car-011அமெரிக்கா, மார்ச் 8 – எலியோ 3 சக்கர காருக்கு இதுவரை 11,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எலியோ மோட்டார்ஸ் நிறுவனம் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற புதிய மூன்று சக்கர காரை வடிவமைத்துள்ளது.

தரமான கட்டமைப்பு, அதிக எரிபொருள் சிக்கனம், சொகுசு என அனைத்தையும் ஒருங்கே தரும் வகையில் இந்த கார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த காருக்கு 100 டாலர் முதல் 1000 டாலர் வரை பெற்றுக் கொண்டு இனையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

1000 டாலர் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, காரை வாங்கும்போது 500 டாலர் வரை தள்ளுபடி வழங்குவதாக எலியோ உறுதியளித்துள்ளது. இந்த காரில் 70 எச்பி சக்தியை 07-1394194608-elio-car-016வெளிப்படுத்தும் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மணிக்கு அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் செல்லும். 0-100 கிமீ வேகத்தை 9.6 வினாடிகளில் கடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன் சக்கரம் டிரைவ் சிஸ்டம் கொண்டது. எனவே, புவியீர்ப்பு விசை மையம் மற்றும் எடை ஆகியவை முன்னோக்கி இருப்பதால் சிறந்த முறையில் தாங்கிக் கொண்டதாக இருக்கும்.

இதன் 3 சக்கரங்களிலும் ஏபிஎஸ் அமைப்புடன் இணைந்து செயல்புரியும் வகையில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 15 செ.மீ. சக்கரங்கள் எலியோவுக்கு கூடுதல் பலத்தையும், தோற்றத்தையும் வழங்குகிறது.

இந்த காரில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். முன்னால் ஒருவரும், பின்புறம் ஒருவரும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கார் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 35 கிமீ வரை ஓடும் என்கிறது எலியோ மோட்டார்ஸ். இதில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 1,000 கிமீ வரை செல்லலாம் என்கிறது எலியோ மோட்டார்ஸ்.