Home நாடு நானிங்கில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை!

நானிங்கில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை!

740
0
SHARE
Ad

b737-masபெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 – காணாமல் போன மாஸ் ஏர்லயன்ஸ் MH370 விமானத்தை தேட புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம் மிகப் பெரிய தேடுதல் பணி மற்றும் மீட்பு நடவடிக்கையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது.

காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை எல்லா நிலைகளிலும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட குழுவினருடன் இணைந்து தேடுதல் பணியில் இறங்குவோம். வெளிநாட்டு அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக ஏற்பாடு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காணாமல் போன விமானம் சீனாவின், நானிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பேஸ்புக் போன்றவற்றில் கூறப்படும் தகவல் பொய்யானது என்று மலேசியன் ஏர்லயன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

“தற்போதைய நிலவரப்படி விமானம் எங்கிருக்கிறது என்ற விபரம் உறுதியாகத் தெரியவில்லை” என்று மலேசியன் ஏர்லயன்ஸ் அறிவித்துள்ளது.