Home கலை உலகம் ஒரு படம் நடித்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும் -காஜல் அகர்வால்!

ஒரு படம் நடித்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும் -காஜல் அகர்வால்!

1227
0
SHARE
Ad

Kajal Agarwal Latest Photos in Baadshah Movie, Kajal Agarwal Latest Hot Navel Show Photos from Baadshah Movieசென்னை, மார்ச் 8 – துப்பாக்கி, ஜில்லா உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர்  காஜல் அகர்வால். திடீரென்று படங்கள் ஒப்புக்கொள்ளும் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டார். 2 படங்களில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். ஏற்கனவே இவரது தங்கை நிஷாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது.

ஆனால் காஜல் திருமணத்தை தள்ளிப்போட்டது ஏன் என்று பலர் கேட்ட வண்ணம் இருந்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் காஜலுக்கு திருமணம் செய்வதுபற்றி பேசிவந்தனர். விரைவில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துடன்தான் படங்களை குறைத்துக்கொண்டீர்களா? என்று காஜலிடம் கேட்டபோது அவர் அளித்த பதில், எண்ணிக்கையைவிட தரத்தை பார்த்து படங்களை ஒப்புக்கொள்ள தொடங்கி இருக்கிறேன்.

ஒரு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் 5 படங்களை ஒப்புக்கொண்டு ஒரு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த பட படப்புடிப்பிற்கு சென்றுவிடுவேன். இப்போது அந்த திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஒரு படம் நடித்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நிறைய படிக்கிறேன். குடும்பத்தினர் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் அமைப்புகளுக்காக பணியாற்றுகிறேன் என காஜல் கூறினார்.