செப்பாங், மார்ச் 8 – காணாமல் போன மாஸ் MH370 விமானம் கடைசியாக ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்ட இடத்தில் இருந்து இன்னும் கூடுதல் தொலைவிற்கு தேடுதல் தொடங்கியுள்ளதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே ரேடால் தொடர்பில் இருந்து விடுபட்ட இடத்திலிருந்து இன்னும் தேடும் தொலைவை அதிகப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
தேடுதல் பணியில் 15 போர் விமானங்கள் மற்றும் மலேசிய கடற்படையைச் சேர்ந்த 6 கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் நஜிப் தெரிவித்தார்.
இது தவிர வியட்நாம், சீனா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தேடுதல் பணிக்கு உதவுவதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.
இன்னும் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், என்ன நடந்தது என்பது குறித்து அறிவிக்க முடியாது என்றும் நஜிப் தெரிவித்தார்.