Home நாடு மாயமான விமானம்: இரண்டாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது!

மாயமான விமானம்: இரண்டாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது!

414
0
SHARE
Ad

b737-masகோலாலம்பூர், மார்ச் 9 – 239 பேருடன் மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தங்களது பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

விமானம் கடைசியாக தொடர்பில் இருந்த நேரம் குறித்து பல்வேறு குழப்பங்களும், முன்னுக்கு பின் முரணான தகவல்களும் கிடைத்து வருகின்றன.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 12.41 மணிக்கு புறப்பட்ட விமானம் 2.40 மணியளவில் தொடர்பில் இருந்து திடீரென விடுபட்டதாக இது வரை கூறப்பட்டுவந்தது.

ஆனால், சுவீடன் நாட்டைச் சேர்ந்த FlightRadar24 என்ற நிறுவனம், விமானம் கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பில் இருந்து விடுபட்டு விட்டதாக அறிவித்துள்ளது. அதாவது 1.30 மணிக்கே விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், சீனாவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிலையம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 டிகிரி ரேடார் தொடர்பில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 333 டிகிரிக்கு மாறியதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசியத் தரப்பில் விசாரணை நடைபெற்று வருகின்றது. அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேடும் பணி தீவிரம்

மாஸ் நிறுவனத்தின் ஊடக மற்றும் வியூக தொடர்பு நிர்வாகி மாலினி சௌந்தரன்ராஜன் கூறுகையில், “கடைசியாக 1.30 மணியளவில் தொடர்பு கிடைத்தது. அதன் பின்னர் விமானம் தொடர்பற்று 24 மணி நேரம் ஆகிவிட்டது. வான் வழியாகவும், கடல் வழியாகவும் தேடுதல் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.”

“இந்த தேடுதல் பணியில் மலேசியாவுடன் சேர்ந்து வியட்நாம், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளும் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் மலேசியாவிலும், பெய்ஜிங்கிலும் காத்திருக்கும் பயணிகளின் உறவினர்களுக்கு ஆலோசனையும், ஆறுதல்களும் கூறி அவர்களை தைரியப்படுத்த மாஸ் தனிக் குழுவை நியமித்துள்ளது”

“விமானம் குறித்து ஏதாவது அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தால், உறவினர்கள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதுவரை பயணிகளின் உறவினர்களுக்கு தகுந்த ஆறுதல்கள் வழங்கி அவர்களுக்கு உதவுவோம்”

“விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது என்று வியட்நாம் கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அதுஅதிகாரப்பூர்வ தகவல் அல்ல” இவ்வாறு மாலினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.