Home நாடு விமானம் திரும்பி வர முயற்சி செய்திருக்கலாம் – ஹிஷாமுடின்

விமானம் திரும்பி வர முயற்சி செய்திருக்கலாம் – ஹிஷாமுடின்

430
0
SHARE
Ad

c29c89ed7b43a5ecee304be8418b8586கோலாலம்பூர், மார்ச் 9 – காணாமல் போன மாஸ் MH370 விமானம், நடுவானில் திரும்ப முயற்சி செய்திருக்கலாம் என்ற புதிய தகவலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “தேடும் பகுதிகளை விரிவு படுத்தியுள்ளோம். விமானம் திரும்பி வர முயற்சி செய்திருக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று வரை, விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், விமானம் மீண்டும் கோலாலம்பூரை நோக்கி திரும்பி வர முயற்சி செய்ததற்கான ரேடார் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளதாக இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice