Home கலை உலகம் கதை சொல்வதை நம்ப வேணாம்!- ப்ரியா ஆனந்த்!

கதை சொல்வதை நம்ப வேணாம்!- ப்ரியா ஆனந்த்!

651
0
SHARE
Ad

atharva-priyaசென்னை, மார்ச் 10 – என்னையும் அதர்வாவையும் இணைத்து சும்மா கதை சொல்றார்கள். யாரும் நம்ப வேண்டாம் என்கிறார் ப்ரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் அசல் தமிழ் நடிகை என்ற பெருமைக்குரியவர் ப்ரியா ஆனந்த். பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காதவர். வை ராஜா வை, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது ஒரு காதல் கிசுகிசுவில் அவர் பெயர் பலமாக அடிபடுகிறது. அதர்வாவும் ப்ரியாவும் தீவிரமாகக் காதலிப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாகின்றன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ப்ரியா ஆனந்த், “நானும் அதர்வாவும் இரும்புக் குதிரை என்ற படத்தில் நடிக்கிறோம். நட்புடன் பழகுகிறோம்.

படப்பிடிப்பில் ஒன்றாக நடிக்கும் நடிகரும் நடிகையும் எலியும் பூனையுமாகவா இருக்க முடியும். சாதாரணமாக சிரித்துப் பேசுவது தவறா. இதற்கே என்னையும் அவரையும் இணைத்து கதைகட்டி உள்ளனர். நம்ப வேண்டாம். அதர்வா நாகரிகமானவர் அதனால் இந்த கிசுகிசுக்களை அவரும் பெரிதுபடுத்தவில்லை.

#TamilSchoolmychoice

படப்பிடிப்பில் நான், அதர்வா மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் அமர்நாத் மூவரும் ஒன்றாக இருப்போம். நான் எதுவும் பேசமாட்டேன் என்று நினைத்து இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு நிறைய நல்ல படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.

தமிழில் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. இதனால் இந்தி படங்களில் நடிக்க முடியவில்லை. எனக்கு கேமரா முன்னால் மட்டும்தான் நடிக்கத் தெரியும். நிஜத்தில் நான் நானாகவே இருப்பேன். இதனால்தான் நிறைய பேருக்கு என்னை பிடிக்கிறது,” என்றார் ப்ரியா ஆனந்த்.