ஆனால், தனது நண்பர்களுடனான போட்டியில் வெற்றி பெறுவதற்காக பேஸ்புக் இணையதளத்திற்கு பணம் கொடுத்துள்ளார் என்று தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் துணை பிரதமர் நிக் கிளெக்கும் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். கிளெக்கிற்கு கடந்த மாதம் 80 ஆயிரம் பேர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
கேமரூனுக்கு 20 ஆயிரம் பேர் வரையே ஆதரவு இருந்தது. ஆனால், கேமரூனுக்கு தற்பொழுது 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சாத்தியமானது எப்படி என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், கேமரூனை பயன்பாட்டாளர்கள் பார்க்கும் வகையில் ஊக்குவிக்க அதற்கான விளம்பரங்களை பிரபலப்படுத்த ஆயிரக்கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளது.
விளம்பர தகவல்களை பேஸ்புக் பொதுவாக வெளியிடுவதில்லை. ஆனால் மார்க்கெட்டிங் நிபுணர்கள் கூறும்போது, கட்சியின் நிதி 7 ஆயிரத்து ஐநூறு பவுண்டு வரை இது போன்ற பிரசாரத்திற்கு செலவு செய்யப்பட்டு இருக்கும் என கூறுகின்றனர். முடிவுகளின் அடிப்படையிலேயே அதற்கான தொகை வசூலிக்கப்படும்.
இது குறித்து தொழிலாளர் கட்சி எம்.பி. ஷீலா கில்மோர் கூறும்போது, புகழை பணம் கொடுத்து கேமரூன் வாங்குவதாக தெரிகிறது. போலியான பேஸ்புக் நண்பர்களுக்கு செலவிடும் அவரது என்னத்திற்லு முடிவே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் கேமரூன் தொலைபேசியில் பேசினார். இதனை அடுத்து கேமரூன் தொலைபேசியில் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளிவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேமரூனின் பேஸ்புக் விவகாரம் தற்பொழுது வெளியே தெரிய வந்துள்ளது.