Home உலகம் குழந்தைகள் உரிமைக்காக லண்டனில் மலாலா மவுன போராட்டம்!

குழந்தைகள் உரிமைக்காக லண்டனில் மலாலா மவுன போராட்டம்!

715
0
SHARE
Ad

Malala-Yousafzai-officially-opens-the-Library-of-Birmingham-in-Birmingham-city-centre-2247869லண்டன், மார்ச் 10 – உலகிலுள்ள குழந்தைகளின் கருத்துகளை கேட்காமலும், அவர்களுக்கு கருத்து சொல்லும் உரிமை வழங்காமலும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 17-ஆம் தேதி லண்டனில் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா யூசுப்சாய் ஒரு நாள் மவுன எதிர்ப்பு போராட்டம் நடத்துகிறாள். பாகிஸ்தானில் ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்த சிறுமி மலாலா.

இவள் பெண் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக, தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்து லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தாள். இப்போது பெண் கல்வி உள்பட பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறாள்.

இந்நிலையில் லண்டனில் நேற்று முன்தினம் மலாலாவின் சமூகத் தொண்டு நிறுவனத்தின் சாரபில் 3 நாள் இளைஞர் எழுச்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் முன்பு மலாலா பேசினாள்.

#TamilSchoolmychoice

இதுவரை குழந்தைகளாகிய நமக்கு, இவ்வுலகில் சம உரிமையும் அதிகாரமும் வழங்கப்படவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக நாம் குரல் கொடுக்க இதுவே சரியான தருணம். நமது உரிமையையும் அதிகாரத்தையும் மவுன புரட்சியின் மூலம் அடைவதற்கு வரும் 17-ஆம் தேதி லண்டனில் மவுன போராட்டம் நடத்துகிறேன். அப்போது என்னோடு இணையுங்கள் என்று மலாலா கூறினாள்.