Home நாடு கண்டறியப்பட்ட கதவு, வால் பகுதிகள் MH370 க்கு உரியதல்ல – அதிகாரிகள் உறுதி

கண்டறியப்பட்ட கதவு, வால் பகுதிகள் MH370 க்கு உரியதல்ல – அதிகாரிகள் உறுதி

524
0
SHARE
Ad

b737-masமார்ச் 10 – வியட்நாம் தேடுதல் குழுவினரால் கண்டறியப்பட்ட விமானத்தின் கதவு மற்றும் வால் பகுதிகள் MH370 விமானத்தின் பாகங்கள் அல்ல என்று மலேசிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தலைவர் அஸாருதீன் அப்துல் ரஹ்மான் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

காணாமல் போன MH 370 விமானத்தின் கதவும், வால்பகுதியும் தோ சு தீவிலிருந்து 50 மைல் தொலைவில் காணப்பட்டதாக வியட்னாம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்று பிரபல தி வால் ஸ்திரிட் ஊடகம் (wall street) செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.