Home வாழ் நலம் ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு!

919
0
SHARE
Ad

Black_pepper_cornsமார்ச் 12 – ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்று கவலைபடுவோறுக்கு இது நல்ல செய்தியாகும். அதாவது, ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது.

மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி,  ஆகியவை குணமாகும்.
இதேப்போல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப் படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள உரிய நிவாரணம் பெறலாம்.